பதிவு செய்த நாள்
01
ஆக
2013
10:08
ராமேஸ்வரம் : ராமேஸ்வரம் ராமநாத சுவாமி கோயில், ஆடித்திருக்கல்யாண விழா, கொடியேற்றத்துடன், நேற்று துவங்கியது. ராமேஸ்வரம் கோயில் பர்வதவர்த்தினி அம்மன் சன்னதியில், விஜயகுமார் குருக்கள் கொடியேற்றினார். ஆக.,6 ல் ஆடி அமாவாசையை முன்னிட்டு, அக்னி தீர்த்த கடலில், ஏராளமான பக்தர்கள் நீராடுவர். ஆக., 8 ல், ஆடித் தேரோட்டம்; ஆக.,11 ல், மூன்றாம் பிரகாரத்தில், சுவாமி, அம்மனுக்கு திருக்கல்யாணம் நடக்கும்.