திருவாரூர் தியாகராஜர் கோயிலில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு திருப்பணி துவக்கம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
02ஆக 2013 10:08
திருவாரூர் தியாகராஜர் கோயில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு, நீண்ட இடைவெளிக்குப் பின் திருப்பணி துவங்கியது. இக்கோயில் உலக புகழ்பெற்றது. திருவாரூர் தேர் என்றால் மிகவும் பிரசித்திப்பெற்றது. தேவராப் பாடல் பெற்ற சிவத்தலங்களில் இதுவும் ஒன்று. தியாகராஜர் என்றால் கடவுளுக்கெல்லாம் தலைவர் என்று பொருள். இங்கு மூலவர் வன்மீகநாதர் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார். அம்மன் கமலாம்பிகை கால் மேல் கால் போட்டு ஒரு ராணியை போல் அமர்ந்திருப்பது மிகவும் சிறப்பு. சப்தவிடத்து தலங்களில் இது முதன்மையானது. இங்குள்ள தியாகராஜரின் முக தரிசனம் காண்பது சிறப்பு. கோயிலின் எதிரில் உள்ள தீர்த்தத்தை கமலாலயம் என்று அழைப்பது உண்டு. ஒரு கோயிலின் தீர்த்தத்தை ஆலயம் என்று அழைப்பது இங்கு மட்டும்தான். இவ்வளவு சிறப்பு வாய்ந்த தியாகராஜர் கோயிலுக்கு கும்பாபிஷேகம் நடத்தவேண்டுமென்பது பக்தர்களின் நீண்டநாள் கோரிக்கையாக இருந்தது. கும்பாபிஷேகத்தை முன்னிட்டு இக்கோயிலில் திருப்பணி ஆரம்பிக்கபட்டுள்ளது.