பதிவு செய்த நாள்
02
ஆக
2013
10:08
நல்லவனாய் வாழ்வோம்
கெட்ட வழக்கங்கள் குறித்து, குர்ஆன்,""உங்களை நீங்களே அழிவில் ஆழ்த்திக் கொள்ளாதீர்கள், என்றும், ""உங்களை நீங்களே கொலை செய்ய வேண்டாம், என்றும் சொல்கிறது. மார்க்கத்துக்கு கட்டுப்பட்டு வாழும் நிஜமான முஸ்லிம், கெட்ட வழக்கங்களுக்கு ஆளாக மாட்டார். இவை உடலுக்கு மட்டுமல்ல, பணத்துக்கும் கேடு ஆகும். ""நீங்கள் வீண் விரயம் செய்யாதீர்கள். நிச்சயமாக வீண் விரயம் செய்வோரை அல்லாஹ் நேசிப்பதில்லை, என்றும், ""நிச்சயமாக வீண் விரயம் செய்வோர் ஷைத்தானின் சகோதரர் களாவர், என்றும் அது சொல்கிறது.கெட்ட வழிக்கு செலவிடும் காசை நீங்கள் தர்மம் செய்யுங்கள். இல்லாவிட்டால், அல்லாஹ் மரணத்திற்குப் பின் உங்களை மூன்று கேள்விகள் கேட்பான். ""பணத்தை எவ்வாறு சம்பாதித்தாய்? எவ்வழியில் அதனைச் செலவு செய்தாய்? உனது உடம்பை எதில் அழித்தாய்? என்பதே அந்த கேள்விகள். இதற்கு நாம் பதில் சொல்லியே ஆக வேண்டும். அப்போது, நமது தவறுகளெல்லாம் வெளிப்பட்டு, இறைவனின் முன்னிலையில் தலை குனிந்து நிற்க வேண்டியிருக்கும். கெட்ட வழக்கங்களை கைவிட வேண்டும் என்பது இன்றைய சிந்தனையாகட்டும்.
இன்று நோன்பு திறக்கும் நேரம்: மாலை 6.48
நாளை நோன்பு வைக்கும் நேரம்: காலை 4.29