தெளிவாகப் பேச வேண்டும் ஸ்லாத்தை நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள், அரபுநாட்டில் பிரசாரம் செய்து வரும்வேளையில், ஏமன் மாகாணத்தை சேர்ந்த ஒரு கோத்திரத்தின் தலைவரான, அம்ரு அலி தவ்ஸி என்பவர், மெக்கா வந்தார். அவரிடம், நபிகளின் எதிர்ப்பாளர்கள், நாயகத்தின் கருத்துக்களை ஏற்க கூடாது என்றனர். அம்ருவும், தன் காதில் பஞ்சை வைத்துக் கொள்வதாக உறுதி கூறி, கையில் சிறிது பஞ்சும் வைத்துக் கொண்டார். பின்னர் அவர் கஃபாவுக்குச் சென்றார். அங்கே, அண்ணலார் கூறிய இறை வசனங்கள் அம்ருவின் காதுகளில் தேனாகப் பாய்ந்தன. அந்த திருவசனங்களின் சொல்லழகு, நடை யழகு, இனிய குரல், தெளிவான உச்சரிப்பு ஆகியவை அம்ருவை ஈர்த்தன. அவர் கையில் இருந்த பஞ்சு தானாக கீழே விழுந்து விட்டது. அவர் செயலற்று நின்றுவிட்டார். பின்பு நாயகம் (ஸல்) அவர்களின் இல்லத்துக்கே சென்றுவிட்டார். நபிகளார் அவரை வீட்டுக்குள்அழைத்துச் சென்று உபசரித்து, இஸ்லாத்தின் கருத்துக்களைப் போதித்தார். அம்ரு இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டார். நாமும் இதுபோல் தெளிவாகப் பேசி எல்லாரையும் மகிழச்செய்வோமே! இன்று நோன்பு திறக்கும் நேரம்: மாலை 6.48 நாளை நோன்பு வைக்கும் நேரம்: காலை 4.29