சென்னை : தமிழகம் முழுவதும் ஆக, 3 ஆடிப்பெருக்கு விழா சிறப்பாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. வறட்சி காரணமாக கடந்த ஆண்டு கலையிழந்து காணப்பட்ட ஆடிப்பெருக்கு விழா, இந்த ஆண்டு காவிரி உள்ளிட்ட ஆறுகளில் தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளதால் மக்கள் உற்சாகமாக ஆடிப் பெருக்க விழாவை கொண்டாடி வருகின்றனர். திருச்சி, ஈரோடு உள்ளிட்ட மாவட்டங்களில் மக்கள் ஆறுகளில் நீராடியும், ஆலயங்களில் சிறப்பு பூஜைகள் செய்தும் வருகின்றனர். புதுமண தம்பதிகள் தங்களின் திருமண மாலைகளை ஆற்றில் விட்டும், சுமங்கலிப் பெண்கள் தாலி கயிறு மாற்றியும் ஆடிப் பெருக்கு விழாவை கொண்டாடி வருகின்றனர்.