செஞ்சி : செஞ்சி பெரியகரம் சிவசுப்ரமணியர் கோவிலில் ஆடி கிருத்திகை திருவிழா நடந்தது. விழாவையொட்டி கடந்த 31ம் தேதி காலை 108 லிட்டர் பால் மற்றும் விசேஷ திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் நடந்தது. தொடர்ந்து 10:00 மணிக்கு மாரியம்மன் கோவில் குளத்தில் காவடி அபிஷேகமும், பகல் 1:00 மணிக்கு அன்னதானமும் நடந்தது. பிற்பகல் 2:00 மணிக்கு மிளகாய் பொடி அபிஷேகம், மார் மீது மாவு இடித்தல், மழுவேந்தல், கடப்பாறை உருவுதல், செடல் சுற்றல் மற்றும் தீமிதி விழா நடந்தது. தொடர்ந்து காவடி ஊர்வலம், தேர் இழுத்தல், லாரி, வேன், ஆட்டோ ஆகியவற்றை அலகு குத்தி இழுத்து வந்தனர். ஆக 1 மாலை திருவிளக்கு பூஜையும், இரவு 8 :00 மணிக்கு இடும்பன் பூஜையும், இரவு 10:00 மணிக்கு நாடகம் நடந்தது.