மதுரை : மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில், ஆவணி மூலத் திருவிழாவை யொட்டி, தங்கக் கொடிமரத்தில் நேற்று கொடியேற்றம் நடந்தது. இவ்விழா, வரும், 21 வரை நடக்கிறது. நேற்று காலை, 10:50 மணிக்கு தங்கக் கொடிமரத்தில் கொடியேற்றப்பட்டது. கொடிமரத்திற்கு சிறப்பு தீபாராதனை நடந்தது. சர்வ அலங்காரத்தில் அம்மன், சுவாமி பக்தர்களுக்கு அருள் பாலித்தனர். இதில், ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.