பதிவு செய்த நாள்
07
ஆக
2013
10:08
நோன்புக்குரிய கூலி
ரமலான் மாதம் பற்றி நாயகம்(ஸல்) அவர்கள், <உரைத்துள்ளவற்றைக் கேளுங்கள். ரமலான் மாதம் வந்துவிட்டால் வானங்களின் கதவுகளும், சொர்க்கத்தின் கதவுகளும் திறக்கப் படுகின்றன. நரகத்தின் வாசல்கள் அடைக்கப்படுகின்றன. ஷைத்தான்களுக்கெல்லாம் விலங்கிடப்படுகின்றன. சொர்க்கத்தில் எட்டு வாசல்கள் உள்ளன. அதில் ஒன்று ரய்யான். அந்த வாசல் வழியாக நோன்பாளிகளைத் தவிர வேறு யாரும் நுழைய மாட்டார்கள். யார் ரமலான் மாதத்தில் ஈமானுடனும் (நம்பிக்கை), நன்மையை எதிர்பார்த்தும் நோன்பு நோற்கிறாரோ, இன்னும் "லைலத்துல் கத்ர் இரவிலும் நின்று வணங்குகிறாரோ அவருடைய முன் செய்த சிறிய பாவங்கள் மன்னிக்கப்படுகின்றன. நோன்புப் பெருநாள், ஹஜ்ஜூப் பெருநாள் ஆகிய இரண்டு இரவுகளில், எவர் விழித்திருந்து தொழுகை புரிகிறாரோ, அவருடைய உள்ளம் கியாம நாளிலே விழிப்புடன் இருக்கும். "நோன்பு எனக்குரியது. அதற்கு நானே கூலி கொடுப்பேன். ஏனென்றால், எனக்காகவும், என் திருப்திக்காகவும் பசித்திருந்தான். தன்இச்சைகளை அடக்கியிருந்தான். மேலும், நோன்பு திறக்கும்போதும், தன் இறைவனை சந்திக்கும் போதும் நோன்பாளிக்கு இருவகை சந்தோஷம் உள்ளது என்கிறான் அல்லாஹ். பெருமைக்குரிய நோன்பிருந்தவர்களுக்கு இறைவனின் அருள் என்றும் உண்டு.
இன்று நோன்பு திறக்கும் நேரம்: மாலை 6.47
நாளை நோன்பு வைக்கும் நேரம்: காலை 4.31