அய்யாவாடியில் நிகும்பலா யாகம் ஏராளமான பக்தர்கள் தரிசனம்.
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
07ஆக 2013 10:08
கும்பகோணத்தை அடுத்த அய்யாவாடியில் மகா பிரத்தியங்கிரா தேவி கோ வில் உள்ளது. ராவணன் மகன் மேகநாதனும், பஞ்சபாண்டவர்களும் அம்பா ளை பூசித்து வேண்டிய வரங்கள் பெற்றுள்ளனர். இங்கு ஒவ்வொறு அம்மாவாசை அன்றும் மிளகாய் வற்றல் கொண்டு நடத்த ப்படும் நிகும்பலா யாகம் சிறப்பானது. பக்தர்கள் ஆசையை விட்டு இந்த யா கத்தில் கலந்து கொண்டு அம்பாளை சரணடைந்தால் சத்ரு உபாதை கள் நீங்கி சகல ஐஸ்வர்யங்களையும் பெறுவர். ஆடி மாத அம்மாவாசையான நேற்று மகா பிரத்தியங்கிரா தேவிக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது. தொடர்ந்து கோவில் மண்டபத்தில் சிறப்பு பூ ஜை நடத்தப்பட்டு மதியம் 12:30 மணிக்கு தண்டபாணி குருக்கள் யாகத்தில் மிளகாய் வற்றல் கொட்டி நிகும்பலா யாகத்தை நடத்தி வைத்தார். இதில் பல ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு மகா பிரத்தியங்கி ரா தேவியை பிரார்த்தனை செய்தனர். யாகத்திற்கான ஏற்பாடுகளை சங்கர் கு ருக்கள் செய்திருந்தார். சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டது. நாச்சியார்கோவில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.