பதிவு செய்த நாள்
08
ஆக
2013
10:08
ஓசூர்: ஓசூர் சந்திரசூடேஸ்வரர் மலைக்கோவிலில், உலக நலனுக்காக, 18ம் ஆண்டு மஹா நவ சண்டி யாகம் வரும், 9ம் தேதி துவங்கி மூன்று நாள் நடக்கிறது. இதையொட்டி, தினம் கோவிலில் பல்வேறு சிறப்பு பூஜைகள், ஹோமங்கள், தீபாராதனைகள் நடக்கிறது. 9ம் தேதி காலை, 10.30 மணிக்கு கணபதி ஹோமம், பகல், 12 மணிக்கு பூர்ணாஹூதி, மாலை, 4 மணிக்கு பச்சைகுளத்தில் நீர்க்குடம் புறப்படுதல், 6 மணிக்கு வாஸ்து சாந்தி, வாஸ்து ஹோமம் நடக்கிறது. இரவு, 7 மணிக்கு கலசஸ்தாபனம், கலசபூஜை, மகா தீபாராதனை நடக்கிறது. வரும், 10ம் தேதி காலை, 8 மணிக்கு கலச பூஜை, ருத்ர ஹோம், 10 மணிக்கு மஹா நவ சண்டியாகம் (முதற்காலம்) நடக்கிறது. 12 மணிக்கு மகா பூர்ணா ஹூதி தீபாராதனை, மாலை, 5 மணிக்கு கல்யாண சூடேஸ்வரர் கோவிலில் விசேஷ சந்தி, மாலை 6 மணிக்கு கலச பூஜை, ருத்ர ஹோமம், இரவு, 7 மணிக்கு மஹா நவ சண்டி யாகம் (இரண்டாம் காலம்) நடக்கிறது. வரும், 11ம் தேதி காலை, 7 மணிக்கு கலச பூஜை, ருத்ர ஹோமம், லட்சுமி ஹோமம், துர்கா ஹோமம் நடக்கிறது. காலை, 9 மணிக்கு மஹா நவ சண்டி யாகம்( மூன்றாம் காலம்), காலை, 10 மணிக்கு மஹா சங்கல்பம், வடுக பூஜை, கன்யா பூஜை, தம்பதி பூஜை நடக்கிறது. காலை, 11.30 மணிக்கு மகா பூர்ணா ஹூதி, நவ சண்டியாக விளக்கவுரை, பகல், 12 மணிக்கு மஹா தீபாராதனை, கலசம் புறப்படுதல் நடக்கிறது. மதியம் ,1.30 மணிக்கு நெய்வேத்யம், தீபாராதனை நடக்கிறது. பூஜைகள் நடக்கும் மூன்று நாளும் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்படுகிறது.