அவிநாசி:அவிநாசி, வாணியர் வீதி முனியப்பன் கோவில் மற்றும் ஆதிபராசக்தி கோவில்களில் ஆடிப்பொங்கல் திருவிழா நடந்தது.நேற்று காலை, அவிநாசிலிங்கேஸ்வரர் கோவிலிலிருந்து பால்குடங்கள் ஊர்வலமாக எடுத்து வரப்பட்டு, கோவிலில் அபிஷேகம் செய்யப்பட்டது.மகா அபிஷேகத்துக்குபின், சிறப்பு பாராயணம் மற்றும் அலங்கார தீபாரதனை நடந்தது. முன்னதாக, முனியப்ப சுவாமிக்கு ஆடுகள் பலியியடப்பட்டன. பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.