அனுப்பர்பாளையம்:சோளிபாளையம் ராம் நகரில் அமைந்துள்ள கொண்டத்துக் காளியம்மன் கோவிலில் மூன்றாம் ஆண்டு குண்டம் திருவிழா நடந்தது.விழாவையொட்டி, தலைமை பூசாரி, அம் மனுக்கு சிறப்பு பூஜை செய்து குண்டம் நிகழ்ச்சியை துவக்கி வைத்தார். தொடர்ந்து நூற்றுக்கும் மேற்பட்ட பக்தர்கள் பக்தி பரவசத்துடன் குண்டம் இறங்கினர். அதைத்தொடர்ந்து அன்னதானம் வழங்கப்பட்டது. விழா ஏற்பாடுகளை ஊர் பொதுமக்கள் செய்திருந்தனர்.