கோவையில் இருந்து வடமேற்கில் சுமார் 15 கி.மீ. தொலைவில் உள்ளது மருதமலை. அற்புதமான முருகன் தலம். இந்தக் கோயிலுக்குச் செல்லும் வழியில் உள்ள ஆலயத்தில், சுயம்பு மூர்த்தமாக விநாயகர்; அருகில் காவடி தூக்கியபடி இடும்பன்; கருவறையில் தண்டாயுதம் ஏந்தி, கிழக்கு நோக்கியபடி மருதாசல மூர்த்தியாக காட்சி தருகிறார், முருகக் கடவுள். திருமணம் முதலான சகல விசேஷங்களுக்கும் இங்கே பூப்போட்டு உத்தரவு கேட்கும் சம்பிரதாயம் வெகுகாலமாக கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.