கோவையில் இருந்து சுமார் 12 கி.மீ. தொலைவில் உள்ள பெரிய தடாகம் கிராமத்தில் மலைப்பகுதி உள்ளது. குன்றிருக்கும் இடத்தில் குடியிருக்கும் குமரக் கடவுள், இந்த மலையில் இல்லாமல் போய்விடுவானா? இந்த மலையின் மேல் அனுமரின் தாகத்தைத் தீர்த்தருளிய முருகப்பெருமான், அனுவாவி சுப்ரமணியர் எனும் திருநாமத்துடன் காட்சி தருகிறார். இங்கு அனுமனுக்கும் சன்னதி உண்டு. அனுமனுக்காக, வேலவன் வேல் கொண்டு உருவாக்கிய சுனையை இன்றைக்கும் தரிசிக்கலாம்!