சுரண்டை:சுரண்டை அழகுபார்வதியம்மன் கோயிலில் ஆடிப்பூர விழா நடந்தது. சுரண்டையில் அழகுபார்வதியம்மன் கோயிலில் ஆடிப் பூர விழாவை முன்னிட்டு காலை கணபதி ஹோமம், பல்வேறு வகையான அபிஷேகங்கள், மற்றும் சிறப்பு பூஜை வழிபாடு, பிரசாதம் வழங்குதல் நடந்தது. மாலையில் வாணவேடிக்கை, அம்மன் சப்பர வீதியுலா மற்றும் புஷ்பாஞ்சலி மற்றும் சிறப்பு வழிபாடு நடந்தது. ஏற்பாடுகளை விழாக்கமிட்டியினர் செய்திருந்தனர்.