மதுரை : மதுரை வந்த சத்தீஸ்கர் முதல்வர் ராமன்சிங் மீனாட்சி அம்மன் கோயிலில் குடும்பத்துடன் வழிபட்டார். நேற்று மாலை 5.30 மணிக்கு தனிவிமானத்தில் மதுரை வந்த அவர், மீனாட்சி அம்மன் கோயிலுக்குச் சென்றார். இணைகமிஷனர் ஜெயராமன் வரவேற்றார். முதல்வர் ராமன்சிங்குடன் அவரது மனைவி, மகன், மகள் மற்றும் தனிச்செயலாளர் அமன்சிங் மற்றும் அதிகாரிகள் வந்தனர். கோயிலில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. அவர் நிருபர்களிடம் கூறுகையில், ""1993ல் நான் மீனாட்சி அம்மன் கோயிலுக்கு வந்துள்ளேன். இங்கு வந்த பின் இனம்புரியாத அமைதி கிடைத்தது. இது எனது தனிப்பட்ட வருகை. இங்குள்ள சிற்பங்களும், ஓவியங்களும் வியப்பை தருகின்றன. நாளை (இன்று) நான் ராமேஸ்வரம் செல்ல உள்ளேன். கோயில் வழிபாட்டுக்கென வந்ததால், அரசியல் பேச வேண்டாமே, என்றார். அவருடன் பா.ஜ., கட்சியினர் யாரும் வரவில்லை.போக்குவரத்து பாதிப்பு:விமான நிலையத்தில் இருந்து நேராக கோயிலுக்கு வந்த ராமன்சிங், வழிபாடு முடிந்ததும் மாலை 6.45 மணிக்கு கோயிலில் இருந்து பசுமலையில் உள்ள ஓட்டலுக்குச் சென்றார். அவர் செல்லும் வழியில் வாகனங்களை போலீசார் நிறுத்தி வைத்திருந்தனர். இதனால் அரை மணி நேரம் போக்குவரத்து பாதித்தது
மீனாட்சி அம்மன் கோயில் ஆவணி மூலத்திருவிழா மதுரை மீனாட்சி அம்மன் கோயில் ஆவணி மூலத்திருவிழா சிறப்பாக நடைபெற்று வருகிறது. விழாவில் மாணிக்கம் விற்ற லீலையில், பிரியாவிடையுடன் சொக்கநாதர் அருள்பாலித்தார். ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.