பதிவு செய்த நாள்
16
ஆக
2013
10:08
இருக்கன்குடி மாரியம்மன் கோயிலில், இன்று, ஆடி கடைசி வெள்ளி பெருந்திருவிழாவில், அம்மன் வீதியுலா நடக்கிறது. இருக்கன்குடி மாரியம்மன் கோயில், ஆடிப் பெருந்திருவிழா, ஆக.,9ல், கொடியேற்றத்துடன் துவங்கியது. அம்மனுக்கு, தினமும் சிறப்பு பூஜைகள் நடந்தன. முக்கிய நிகழ்ச்சியான ஆடிப்பெருந்திருவிழா, இன்று நடக்கிறது. இதையொட்டி, காலை 10.30 மணிக்கு உற்சவ மாரியம்மனுக்கு, கும்பாபிஷேகம், அலங்காரம், தீபாராதனை நடக்கிறது. மதியம் 2 மணிக்கு, ரிஷப வாகனத்தில், அம்மன் வீதியுலா நடக்கிறது. இதில், ஏராளமானோர் கலந்து கொள்வர். திருநெல்வேலி, கோவில்பட்டி, சாத்தூர், சிவகாசி, விருதுநகர், மதுரை உள்ளிட்ட முக்கிய ஊர்களில் இருந்து, சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகின்றன. ஏற்பாடுகளை, கோயில்பரம்பரை அறங்காவலர் குழுத்தலைவர் ராமமூர்த்திபூஜாரி, செயல்அலுவலர் தனபாலன் செய்துள்ளனர். சாத்தூர் டி.எஸ்.பி. சின்னையா தலைமையில் போலீஸ்பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.