அகோபில வரதராஜபெருமாள் கோயில் ஆவணி பிரம்மோற்சவ திருக்கல்யாணம் ஆக, 25 தேரோட்டம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
24ஆக 2013 10:08
பாலசமுத்திரம், : பழநி தேவஸ்தானத்தை சேர்ந்த, பாலசமுத்திரம் அகோபில வரதராஜப்பெருமாள் கோயிலில், ஆவணி பிரம்மோற்சவ விழாவை முன்னிட்டு திருக்கல்யாணம் நடந்தது. பாலசமுத்திரம் அகோபில வரதராஜப்பெருமாள் கோயிலில், ஆவணிபிரம்மோற்சவ திருவிழா ஆக.17ல் கொடியேற்றத்துடன் துவங்கி தொடர்ந்து ஆக.28 வரை நடக்கிறது.முக்கிய நிகழ்ச்சியான திருக்கல்யாணம் நேற்றிரவு நடந்தது. சுவாமி, பூதேவி, ஸ்ரீதேவியுடன் மணக்கோலத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். ஆக, 25 காலை 7.15 மணிக்கு தேரோட்டம் நடக்கிறது. ஏற்பாடுகளை பழநிகோயில் இணை ஆணையர்(பொ) ராஜமாணிக்கம் செய்துள்ளார்.