கோவில்பட்டி: கோவில்பட்டி அருகே சாய்பாபா கோயிலில் முப்பெரும் விழா நடந்தது. தென்னிந் திய அளவிலான யோகா போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரி சளிப்பு விழா, மதுரை டூ கன்னியாகுமரி கொண்ட தென்மாவட்ட அளவில் சிறந்த சேவை செய்வோருக்கான சாய்பாபா விருது வழங்கும் விழா மற்றும் தலைகீழாக தொங்கியபடி ஒருமணி நேரம் செஸ் விளையாடும் சாதனை நிகழ்ச்சி ஆகிய முப்பெரும் விழா நடந்தது. ஸ்ரீஷீரடி சாய் பாபா கோயிலில் நடந்த விழாவிற்கு கோவில்பட்டி எம்எல்ஏ கடம்பூர்ராஜூ தலைமை வகித்து விருது கள் வழங்கி சாத னை நிகழ்ச்சியை துவக்கி வைத்தார். துரைராஜ், கேஆர்ஏ வித்யாஷ்ரம் பள்ளி ஆசிரியர் ஜெயக்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஸ்ரீஷீரடி சாய்பாபா ஞானத் திருக்கோயில் மற்றும் ஸ்ரீசக்திபாலா அறக்கட் டளை நிறுவனர் வேலுச் சாமி கலந்து கொண்டு விழாவை துவக்கி வைத்து பேசினார்.யோகா போட்டியில் வெற்றி பெற்ற பள்ளி மாணவ மாணவிகளுக்கும், சாய்பாபா விருது வழங்கப் பட்டது. செஸ் பயிற்சியாளர் தங்க மாரியப்பன் தலை கீழாக தொங்கியபடி பலருடன் செஸ் விளையாடிய சாதனை நிகழ்ச்சி நடந் தது. சக்திபாலா அறக்கட்டளை ஜெயா நன்றி கூறினார். விழாவில் தமிழ்நாடு நுகர்வோர் கூட்டமைப்பு தலைவர் ராமச்சந்திரன், நாகர்கோவில் சேவைத்தொண்டர் அசோகன், கோவில்பட்டி அதிமுக முன்னாள் உட்பட பலர் கலந்து கொண்டனர். ஏற்பாடுகளை ஸ்ரீசக்தி பாலா அறக்கட்டளையினர் செய்திருந்தனர்.