பதிவு செய்த நாள்
30
ஆக
2013
09:08
சென்னை: கர்நாடக இசையில், புகழ் பெற்ற செம்பை வைத்தியநாத பாகவதரின் நினைவாக, சென்னை, தி.நகர் கிருஷ்ண கான சபாவில், "செம்பை வைத்தியநாத பாகவதர் இசை விழா ஆக 30 காலை 9 மணிக்கு துவங்கி, ஆக 31 ம், செ 1ம்நடக்கிறது. கர்நாடக இசை கலைஞர்,கே.ஜே.ஜேசுதாசின், "திருவனந்தபுரம் தரங்கிணிஸரி இசைப் பள்ளி சார்பில், இவ்விழாவை நடக்கிறது. இதில், செம்பை வைத்தியநாத பாகவதரின் மகன் செம்பை சீனிவாசன், மருமகள் கோமதி சீனிவாசன் மற்றும் பிரதான சீடர்கள் உட்பட கர்நாடக இசையில் திறமை படைத்த பிரபல கலைஞர்கள் பங்கு பெறுகின்றனர். விழாவில், கர்நாடக இசை உலகில், 80 வயதை தாண்டிய, மூத்த பிரபல கலைஞர்கள் கவுரவிக்கப்பட உள்ளனர். இன்று நடக்கும் விழாவில், குரல் பிரிவில், கிருஷ்ணமூர்த்தி, வெங்கட்ராமன்; வயலின் - அனந்தராமன்; மிருதங்கம் - மெட்ராஸ் கண்ணன்; தம்புரா - லட்சுமி நாராயணன்; நாதஸ்வரம் - ராஜண்ணா, தவில் - பொறையாறு வேணு பிள்ளை ஆகியோருக்கு விருது வழங்கப்படுகிறது. நாளை, குரல் பிரிவில், பால முரளி கிருஷ்ணா, ஸ்ரீகாந்தன், தஞ்சாவூர் சங்கர ஐயர்; மிருதங்கம் - டி.கே. மூர்த்தி; நாதஸ்வரம் - அச்சல்புரம் சின்னத்தம்பி; தவில் - ராமலிங்கம், தம்புரா - வெங்கட்ராமன்; ஆர்மோனியம் - பல்லடம் வெங்கட்ரமண ராவ் ஆகியோருக்கும், செப்டம்பர், 1ம் தேதி, குரல் பிரிவில், மணக்கால் ரங்கராஜன், திருப்பூந்துருத்தி வெங்கடேசன், சுப்ரமணியன்; வயலின் - கிருஷ்ணன்; மிருதங்கம் - காரைக்குடி சந்திரமவுலி; நாதஸ்வரம் - நடராஜன்; தவில் - பாலு; ஜலதரங்கம் - ஆணையம்பட்டி கணேசன் ஆகியோருக்கும் விருது வழங்கப்படுகிறது. மேலும், கோபாலகிருஷ்ணன், ஜெய விஜயன், நேதனூரி கிருஷ்ணமூர்த்தி, பிரசாலா பொன்னம்மாள் ஆகியோருக்கு சிறப்பு விருது வழங்கப்படுகிறது. மூன்று நாட்களிலும், காலை, 9:00 மணி முதல் இரவு, 7:00 மணி வரை, கச்சேரிகளும், ஆக,30, ஆக,31 இரவு 7:00 - 7:30 வரை, விருது வழங்கும் நிகழ்ச்சி நடக்கிறது. செப்., 1ம் தேதி, இரவு, 7:30 மணி முதல், 9:15 வரை, விருது வழங்கும் நிகழ்ச்சி நடக்கிறது. அன்று, சிறப்பு நிகழ்ச்சியாக, கே.ஜே.ஜேசுதாஸ், கோபாலகிருஷ்ணன், ஜெயா விஜயன் ஆகியோரின், குரு சமர்ப்பண இசை நிகழ்ச்சி நடக்கிறது