பதிவு செய்த நாள்
30
ஆக
2013
10:08
ஊத்துக்கோட்டை : அஷ்டமி தினத்தை ஒட்டி, பைரவர் கோவிலில் சிறப்பு பூஜைகள் நடந்தன. ஊத்துக்கோட்டை அடுத்த, தொம்பரம்பேடு கிராமத்தில் அமைந்துள்ளது மகா காலபைவரர் கோவில். இக்கோவிலில், ஒவ்வொரு மாதமும், வளர்பிறை அஷ்டமி, தேய்பிறை அஷ்டமி விழா சிறப்பாக கொண்டாடப்படும். நேற்று முன்தினம், அஷ்டமி தினத்தை ஒட்டி, மூலவருக்கு பால், தயிர், பஞ்சாமிர்தம், தேன், மஞ்சள், பன்னீர், விபூதி உள்ளிட்ட அபிஷேகப் பொருட்களால் சிறப்பு அபிஷேகம் நடந்தன. பின்னர் வெள்ளிக்கவசம் அணிவிக்கப்பட்டு, மலர் அலங்காரம் செய்யப்பட்டன. தொடர்ந்து மூலவருக்கு மகா தீபாராதனை நடந்தது.