புதுச்சேரி: மணக்குள விநாயகர் கோவிலை விரிவுப்படுத்தி, புதிய தளம் அமைக்கும் பணி நேற்று நடந்தது. மணக்குள விநாயகர் கோவிலை புதுப்பித்து, கும்பாபிஷேகம் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்காக, பொதுப்பணித் துறை செயற்பொறியாளர் சத்திய மூர்த்தி தலைமையில் தொழில் நுட்பக் குழு அமைக்கப்பட்டு, 3 கோடியே 10 லட்சம் ரூபாய் செலவில் திருப்பணி வேலைகள் முழு வீச்சில் நடந்து வருகிறது. திருப்பணியின் முக்கிய பணியாக, மணக்குள விநாயகர் கோவில், வாஸ்து அடிப்படையில் விரிவுப்படுத்தப்பட உள்ளது. இதற்காக, முத்தையா ஸ்தபதியின் ஆலோசனைகள் பெறப்பட்டு, புதிதாக தளம் அமைக்கும் பணி நேற்று நடந்தது.