பழநி: பழநி கோயில் உண்டியலில், 23 நாட்களில் ஒரு கோடியை 15 லட்சத்தி 52165 ரூபாய் வசூலானது. பழநி மலைக்கோயில் கார்த்திகை மண்டபத்தில் உண்டியல் எண்ணிக்கை நடந்தது. இதில், தங்கம் 614 கிராம், வெள்ளி 5 ஆயிரத்தி 415 கிராம், வெளிநாட்டுகரன்சிகள் 801 மற்றும் ரொக்கமாக ஒரு கோடியை 15 லட்சத்தி 52165 ரூபாய், 23 நாட்களில் கிடைத்துள்ளது. தாலிகள், வீடு, ஆள்ரூபம், மோதிரம், கைக்கடிகாரம் போன்ற தங்கம் மற்றும் வெள்ளியிலான பொருட்களை பக்தர்களால் காணிக்கையாக செலுத்தப்பட்டிருந்தது. கோயில் இணை ஆணையர்(பொ) ராஜமாணிக்கம், திண்டுக்கல் உதவி ஆணையர் ரமேஷ், முதுநிலைகணக்காளர் ஜெயப்பிரகாசம் கண்காணித்தனர்.