பதிவு செய்த நாள்
10
செப்
2013
10:09
செஞ்சி: செஞ்சி அருகே, பழங்காலக் குகை ஓவியங்களை ஆய்வாளர்கள் கண்டு பிடித்துள்ளனர்.விழுப்புரம் மாவட்டம், செஞ்சி தாலுகா, வடகால் கிராமத்தில், மலைக் குகையில், திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு அடுத்த, வேளியநல்லூர் கோரக்கர் அறிவர் பள்ளி பேராசிரியர், ஆதிசங்கரன் தலைமையிலான குழுவினரின் ஆய்வு நடந்தது.ஆய்வில், குகைப் பகுதியில், பழங்காலத் துறவியர் வாழ்ந்த, கற்படுக்கைகள் நான்கும், மாணவர்களுக்குப் போதிக்கும் ஆசிரியர்களின் சாய்வு இருக்கைகள் இரண்டையும் கண்டறிந்தனர். மேலும், குகையின் கூரைத் தளத்தில், செந்நிற வண்ணத்தில் தீட்டப்பட்ட விலங்குகள் மற்றும் பறவைகளின் ஓவியங்களும், இருபுற முத்தலைக்கோல் மற்றும் கோட்டுருவ மனித உருவங்களையும், இக்குழுவினர் கண்டு பிடித்தனர்.இவை, 3,500 ஆண்டுகள் பழமையானது என, தெரிய வந்துள்ளது.