பதிவு செய்த நாள்
13
செப்
2013
11:09
திருப்போரூர்: திருப்போரூர் கந்தசுவாமி கோவிலில், உண்டியல் வருமானம், 24 லட்சம் ரூபாய் கிடைத்துள்ளது. இங்கு, 85 நாட்களுக்கு பின், உண்டியல் வசூலை எண்ணும் பணி, நேற்று நடந்தது. பணி, நேற்று காலை, 10:00 மணிக்கு துவங்கியது. மொத்தம் உள்ள, 10 உண்டியல்களில், 9 உண்டியல்களின் பணம் எண்ணப்பட்டன. இதில், 24 லட்சம் ரொக்கப் பணமும், 225 கிராம் தங்கமும் 1,850 கிராம் வெள்ளியும் பக்தர்கள், காணிக்கையாக வழங்கி இருந்தனர்.