கிருபாபுரீஸ்வரர் கோயிலில் பிட்டுக்கு மண்சுமந்த ஐதீகம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
14செப் 2013 10:09
திருவெண்ணெய்நல்லூர்:திருவெண்ணெய்நல்லூர் மங்களாம்பிகை சமேத கிருபாபுரீஸ்வரர் கோவிலில் பிட்டுக்கு மண் சுமந்த ஐதீக நிகழ்ச்சி செப் 13 நடந்தது.இதையொட்டி காலை 6:00 மணிக்கு பஞ்சமூர்த்திகளுக்கு அபிஷேகம், மாலை 4:00 மணிக்கு சிறப்பு தீபாராதனை நடந்தது. பின், உற்சவர் சிவபெருமான், அம்பாளுடன் கையில் மண்வெட்டி சுமந்து மாட வீதிகளின் வழியே வீதியுலா புறப்பட்டு மலட்டாற்றிக்கு சென்றார். மாலை 6:00 மணிக்கு ஆற்றின் கரையில் சுவாமியை வைத்து விட்டு குருக்கள் ரவி அணை கட்டும் ஐதீகத்தை செய்தார். மாலை 6:30 மணிக்கு மேலமங்கலம் குமாரசாமிதம்பிரான் சுவாமிகள் சொற்பொழிவாற்றினார். ஏற்பாடுகளை வாணிய சமூகத்தினர் செய்திருந்தனர்.