கம்மாபுரம்:கம்மாபுரம் பகுதியில் உள்ள கோவில்களில் நடந்த மண்டல பூஜையில் ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர். கம்மாபுரம் அடுத்த சி.கீரனூர் வீரனார் கோவில், தேவங்குடி காலனி தெரு விநாயகர் கோவில், கார்மாங்குடி எல்லையம்மன் கோவில்களில், கடந்த 16ம் தேதி கும்பாபிஷேகம் நடந்தன. அதைத் தொடர்ந்து மண்டல பூஜை நடந்து வருகின்றன. சி.கீரனூர் வீரனார் கோவிலில் நேற்று காலை நடந்த மண்டல பூஜையில் மூலவருக்கு 108 அபிஷேக ஆராதனை, அன்னப்படையல் நடந்தது. அதே போல், தேவங்குடி காலனி தெரு விநாயகர் கோவில், கார்மாங்குடி எல்லையம்மன் கோவில்களில் சிறப்பு அபிஷேக ஆராதனை நடந்தது. ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.