திருக்கோவிலூர்:திருக்கோவிலூர் உலகளந்த பெருமாள் கோவிலில் புரட்டாசி மகோற்சவத்தை முன்னிட்டு புஷ்ப வல்லி தாயார் ஊஞ்சல் சேவையில் அருள்பாலித்தார். திருக்கோவிலூர் உலகளந்த பெருமாள் கோவிலில் புரட்டாசி மகோற்சவ விழா நேற்று முன்தினம் துவங்கியது. அதிகாலை 5.30 மணிக்கு பெருமாள் விஸ்வரூப தரிசனம், 7 மணிக்கு திருப்பாவை சாற்று முறை நடந்தது. 7.30 மணிக்கு சுவாமி கண்ணாடி அறையில் எழுந்தருளினார். 10.30 மணிக்கு திருக்கல்யாண வைபவம் நடந்தது. மாலை 6 மணிக்கு புஷ்பவல்லி தாயார் சமேத தேகளீச பெருமாள் ஊஞ்சல் சேவையில் பக்தர் களுக்கு அருள்பாலித்தார். 7.30 மணிக்கு விசேஷ திருவாராதானம், நாலாயிர திவ்யபிரபந்தம், வேத பாராயணம், சேவை சாற்றுமுறை, சுவாமி ஆஸ்தானம் எழுந்தருளினார். ஜீயர் ஸ்ரீநிவாச ராமானுஜாச்சாரிய சுவாமிகள் உத்தரவின் பேரில் கோவில் நிர்வாகத்தினர் விழா ஏற்பாடுகளை செய்திருந்தனர். புரட்டாசி மாதம் முழுவதும் விழா நடக்கிறது.