Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
கோகுல கிருஷ்ணன் கோயிலில் புரட்டாசி ... இறைவனை துதித்தால் தீய எண்ணம் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
பிளாஞ்சேரி கைலாசநாதர் கோவிலில் பவுர்ணமி ஜெயமங்களா யாகம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

23 செப்
2013
11:09

கும்பகோணம்: கும்பகோணம் அருகே உள்ள திருநாகேஸ்வரம் பிளாஞ்சேரி கிராமத்தில் காமாட்சியம்மன் உடனாய கைலாசநாதர் கோவில் உள்ளது. இங்கு பிராச முனிவரால் பிரதிஷ்டை செய்து வழிபட்ட சரபசூளினி அம்மன் தனிசன்னதி கொண்டு அருள்பாலிக்கிறார். சரபசூளினியின் சிரசிலிருந்து தானாக எலுமிச்சை கீழே இறங்கி வரும் அதிசய நிகழ்வு இன்றளவும் நடக்கிறது. சிறப்புபெற்ற இவ்வாலயத்தில் சரபசூளினிக்கு பௌர்ணமி தோறும் ஜெயமங்களா யாகம் நடைபெறுவது வழக்கம். பில்லிசூன்யம், ஏவல், கர்மவினைகள் அகலுதல், வழக்குகளில் வெற்றி, திருமணத்தடை அகலுதல் போன்ற காரியங்கள் ஜெயமங்களா யாகத்தின் மூலம் கிடைப்பதாக நம்பப்படுகிறது. இதனால் பௌர்ணமி ஜெயமங்களா யாகத்தில் மாதந்தோறும் நூற்றுக்கணக்கான வெளியூர் மற்றும் வெளிமாநில, வெளிநாட்டு பக்தர்கள் திரளாக கலந்துகொண்டு அம்பாளை தரிசனம் செய்கின்றனர். அதன்படி, பௌர்ணமி தினத்தையொட்டி மாலை ஜெயமங்களா யாகம் நடந்தது. முன்னதாக சரபசூளினிக்கு சிறப்பு புஷ்பலங்காரம், ஆராதனை நடந்தது. தொடர்ந்து சிறப்பு ஹோமம் நடந்தது. பரம்பரை அறங்காவலர் நாகராஜசிவாச்சாரியார் தலைமையில் 10க்கும் மேற்பட்ட சிவாச்சாரியார்கள் ஜெயமங்களா யாக பூஜைகளை செய்தனர். இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு தரிசனம் செய்தனர். நிறைவாக அனைவருக்கும் பிரசாதம், அன்னதானம் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை பரம்பரை அறங்காவலர் நாகராஜகுருக்கள் மற்றும் ஆலயப்பணியாளர்கள் செய்திருந்தனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மாமல்லபுரம்: மாமல்லபுரம், ஸ்தலசயன பெருமாள் கோவிலில், பங்குனி உத்திரம் உத்சவத்தை முன்னிட்டு, நிலமங்கை ... மேலும்
 
temple news
சென்னை: மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவிலில் பங்குனி பெருவிழாவை ஒட்டி, இன்று அதிகாரநந்தி சேவை நடைபெற்றது. ... மேலும்
 
temple news
மானாமதுரை; மானாமதுரை தயாபுரம் முத்துமாரியம்மன் கோயில் பங்குனி பொங்கல் விழாவில் நூற்றுக்கணக்கான ... மேலும்
 
temple news
சென்னை; வடபழநி ஆண்டவர் திருக்கோயில் பங்குனி உத்திரம் இலட்சார்ச்சனை தெப்பத் திருவிழா வரும் 29ம் தேதி ... மேலும்
 
temple news
தஞ்சாவூர் : கணபதி அக்ரஹாரத்தில் கோலாகலமாக நடந்த பிரம்ம நாகரேச்வரர் கோவில் கும்பாபிஷேகத்தில் திரளான ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar