Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
 
 

இன்றைய செய்திகள் :
சனிக்கிழமை விரதம்: திருப்பம் தரும் திருப்பதி! சனிக்கிழமை விரதம்: திருப்பம் தரும் ... தெய்வம் யாவரும் வணங்கும் தெய்வம் யார் தெரியுமா? தெய்வம் யாவரும் வணங்கும் தெய்வம் ...
முதல் பக்கம் » துளிகள்
உக்கிர சக்தி வாய்ந்த அம்மனுக்குரிய கரவீரம் மலர்!
Share
எழுத்தின் அளவு:
Temple images

பதிவு செய்த நாள்

28 செப்
2013
11:50

நாம் சாதாரணமாக அழைக்கும் அரளி, இலக்கியங்களில் அலரி என்றே இடம் பெறுகிறது. சங்க இலக்கியம் கரவீரம் என்று குறிப்பிடுகிறது. சிவனுக்குரிய மலராகவே இம்மலர் சித்தரிக்கப்பட்டாலும், பழக்கத்தில் இம்மலர்மாலை அம்பிகைக்குரியதாகவே... அதுவும் மாங்காடு அம்மன், திருவேற்காடு அம்மன், பல்வேறு காளியம்மன்கள், அனைத்துக் கோயில்களிலும் குடி கொண்டிருக்கும் துர்க்கையம்மன் என உக்கிர சக்தி வாய்ந்த அம்மனுக்குரியதாகவே கருதப்படுகிறது.

தொடைத்தலை மலைத்து இதழி துன்னிய
வெருக்கலரி வன்னி முடியின்
சடைத்தலை மிலைச்சியத போதனன் எம்
ஆதி பயில்கின்ற பதியம்

ஞானசம்பந்தரின் திருக்கோகர்ணப்பதிகம், சிவபெருமான், சடையில் கொன்றை, எருக்கு, வன்னி ஆகியவற்றோடு அலரி யும் அணிந்தவர் என்கிறது. (ஒரு விஷயம். புதுக்கோட்டைமாவட்டம் திருக்கோகர்ணத்தில் தலமரம் மகிழமரம் தான் ஆனால், சம்பந்தர் பாடிய திருக்கோர்ணம் இதல்ல. கர்நாடக மாநிலத்தில் உள்ள தலம் அது.)

பரிபாடல் வரிகளில் இம்மலர், கணவீரி (11-20) என்றும், திருமுருகாற்றுப்படையில் நக்கீரரும் அவ்வாறே இம்மலரைக் குறிப்பிட்டுள்ளதை, பெருந்தண் கணவீர நறுந்தண் மாலை... (அதாவது குளிர்ந்த அரளிப்பூவால் தொடுக்கப்பட்ட மாலை) என்ற வரிகளிலிருந்து அறிய முடிகிறது. எனவே அலரி தான் அரளி என்பது புலப்படுகிறது. அரளி என்று சாதாரணமாக நம்மால் அழைக்கப்படும் மலர் செவ்வரளிதான் என்றாலும், தங்க அரளிப்பூவும், வெண் அரளிப்பூவும் கூட நாம் எளிதாகப் பார்க்கக் கூடியவையே. சிவந்த அரளிப் பூ எங்கும், எத்தகைய சீதோஷ்ண நிலையிலும் வளரக்கூடிய ஓரடுக்கு மலராகவும், கெட்டி அரளி எனப்படும் ஈரடுக்கு மலராகவும் நமக்குக் கிடைக்கிறது. விரும்பி வாங்கப்படுவது செவ்வரளிப்பூதான். மகாவாராஹிக்குரிய மலர்களில் செவ்வரளி மிக முக்கியமானதாகக் கருதப்படுகிறது.

அரளிப்பூ கொண்டு வந்தே எங்கள்
அபிராமியை பூஜை செய்தால்
அளவில்லாத செல்வத்தை
அவள் அகமகிழத் தந்திடுவாள்

என்கிறது மலர் ஸ்தோத்திரப் பாடல். அதற்காக வெண் அரளியையும், இளம் சிவப்பு நிற அரளியையும் புறக்கணித்துவிட வேண்டாம். வெண்மலர்களால் இறைவனை பூஜிக்கும்   போதே நம்மையறியாமல், நாலா திசையிலும் ஆர்ப்பரித்துக் கொண்டிருக்கும் உள்ளம் மெல்ல மெல்ல அமைதியடைந்து ஆழ்கடல் பாதாளத்திற்கு வந்துவிடும் என்பதில் சந்தேகமே இல்லை. அதுபோலவேதான் ஒரு கூடை  பொன்வண்ண (மஞ்சள்நிற, தங்கநிற) மணி போன்ற தங்க அரளியைச் சேகரித்துக் கொண்டு, ஒவ்வொரு நாமமாகச் சொல்லிச் சொல்லி நிதானமாக இறைவனுக்கு அர்ப்பணம் செய்து பாருங்கள். அதுவும் மலர்களை சுவாமியின் மீது தூக்கி வீசாமல், அழகாக ஒவ்வொரு மலராக அலங்காரம் செய்வது போல் வைத்துப் பாருங்கள். உள்ளம் மகிழ்ச்சியில் துள்ளும். இனம் புரியாத ஆனந்தம் உள்ளுக்குள் வந்து உட்கார்ந்து கொள்ளும். நாள் முழுவதும் சந்தோஷமாகக் கழியும். மஞ்சள் மலர்களுக்கு மகிழ்ச்சியை அள்ளித் தரும் அபார சக்தி உண்டு என்பதை உணர்ந்து கொள்வீர்கள். ஒவ்வொரு மலருக்கும் ஒவ்வொரு சக்தி இருக்கிறது. ஒவ்வொரு நிற அரளி மலருக்கும் மிக அழகான பலன் இருப்பதை பூக்களின் மகிமைகளில் தொகுத்துள்ளார் முனைவர். பக்தவத்சலம்.

பொய்மையைச் சரணடையச் செய்திடும்
மென் சிவப்பு அரளி!
அமைதியான மனம் தரும் வெண் அரளி!
இறைநிலை அளித்திடும் இளஞ்சிப்பு அரளி!
இதயத்தை நேர்ப்படுத்தும் ஆழ்சிவப்பு அரளி!
பொங்கும் மங்கல மருளும் பொன்னிற அரளி!

அனைவருக்கும் கிடைக்கக்கூடிய  எளிய மலர் செவ்வரளி. இம்மலர்-சோலை, நந்தவனம், தோட்டம், பாதையோர பாலைவனம் என்ற பாகுபாடுகளின்றி, எங்கும் மிக எளிமையாக வியாப்பிக்கின்ற அற்புத குணம் உடையது. சஹாரா பாலைவனத்தில் கூட சிரித்துப் பூக்கின்ற அழகிய மலர் இது. இந்த மலருக்கு விஞ்ஞான பூர்வமாக, காற்றிலுள்ள கார்பனின் அளவைக் குறைக்கக்கூடிய ஆற்றல் உண்டு என்பதால்தான், நமது தேசிய நெடுஞ்சாலைகளில், நாற்கரசாலைகளில் அக்கறையுடன் வளர்க்கப்படுகின்றன. அமெரிக்க நகரங்களான கலிஃபோர்னியா, டெக்ஸாஸ் போன்ற இடங்களில் கூட மீடியன் செடிகளாக வளர்க்கப்படுகின்றது. மண் அரிப்பைத் தடுக்கும் சக்தி இந்த மலர்ச் செடிக்கு உண்டு என்பதால், புதிய குடியிருப்புப் பகுதிகளிலும் வளர்க்கப்படுகிறது. இவ்வளவு மகிமைகளைக் கொண்டிருக்கும் இந்தப் பூவின் படைப்பில் ஏனோ இறைவன் ஒரு குறைபாட்டை வைத்து நம்மைச் சிந்திக்க வைத்துவிட்டான். குறைபாடு என்பது மனிதக் கண்களுக்கேயன்றி வேறில்லை. அரளி விதையின் விஷத்தன்மை மிகவும் கொடூரமானது. மனித உயிர்களை பலிவாங்கும் அளவுக்கு வீரியம் வாய்ந்தது. இம்மலருக்குரிய வருந்தத்தக்க விஷத் தன்மை குறித்து, ப்ரியா எனும் பெண் இது என்ன பூ? கவிதையில் மிக அழகாகக் குறிப்பிடுகிறார்.

வண்ணத்தில் வனப்பும்
வாசத்தில் வசியமும்
விதையில் ஏனோ வஞ்சகமும்
வைத்திருக்கும் பூ என்னப்பூ? அரளிப்பூ!

இந்தக் கேள்வி  எல்லோர் மனதிலும் ஏற்படுவது இயற்கைதானே! வெங்கட் என்பவர், தங்க அரளி விதை கொடுக்கும் பிரச்னை, இலங்கையின் பெரும் பிரச்னையாக இருந்தது பற்றி மிக நீண்ட ஆய்வுக் கட்டுரை ஒன்றைக்கூட எழுதியுள்ளார். தங்க அரளியின் விஷம் கடுமையானது. அரளி விதையை அரைத்துக் குடித்து உயிருக்குப் போராடும் மனித உயிர்களைக் காப்பாற்ற பயன்படுத்தப்படுகிறது என்றும், கிராமப்புறங்களில் இந்த விஷத்துக்கு முறிவாக அடுப்புக்கரி சாப்பிடக் கொடுக்கப்படுகிறது என்பதும் தெரியவந்தபோது... இம்மலரின் மீது சற்று கோபம் வரத்தான் செய்கிறது. அதே சமயத்தில், இறைவனின் படைப்புகளை அதனதன் குணநலன்களைப் புரிந்துகொண்டு சர்வ ஜாக்கிரதையாகப் பயன்படுத்தினால் அதற்கான பலன்களும் உண்டுதான்.  இதற்கெல்லாம் பயந்து ஓடிவிடவில்லை யாரும்! தமிழகத்தின் பல பகுதிகளில், குறிப்பாக சேலம் பனைமரத்துப்பட்டி வட்டாரங்களில் மட்டுமே சுமார் ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் அரளிப்பூவை விளைவிக்கிறார்கள். தினம் அதிகாலையில் பூக்களைப் பறித்து சென்னை, பெங்களூர் மற்றும் சேலத்துக்கு அனுப்பி விடுகிறார்கள். நல்ல லாபம் கிடைக்கக்கூடிய விவசாயம் இது என்கிறார் ஒரு அரளிப்பூ விவசாயி. விவசாயிகளுக்கு மட்டுமல்ல. அரளிப்பூ, அனைவருக்கும் நல்வாழ்வு கொடுக்கக்கூடிய எளிமைப்பூ. சிந்தை ஒருமித்து சிவப்பு அரளி கொண்டு பூஜை செய்தால், குடும்பச் சச்சரவுகள் மறைந்து ஒற்றுமை  ஏற்படும். மனம் திறந்து கடன் பிரச்னைகளை கடவுளிடம் சமர்ப்பித்துவிட்டு, மஞ்சள் அரளி கொண்டு பூஜை செய்தால் கடன் தொல்லை காணாமல் போகும். வேதனை மிகுதியால் சஞ்சலப்படுபவர்கள், வெள்ளை அரளி கொண்டு வேதப்பிரானை அர்ச்சித்து வணங்கினால் மன அமைதி கிடைக்கும். இத்தகைய பெருமை மிகு அரளிப்பூ, அனைத்து ஆலயங்களின் நந்தவனங்களிலும் செல்லக் குழந்தையாகவே வளர்க்கப்பட்டு வருகிறது. என்றாலும் திருக்கரவீரம் மற்றும் திருக்கள்ளில் ஆகிய புண்ணியஸ்தலங்களில்தான் ஸ்தல விருட்சமாகத் திகழக்கூடிய பெருமை பெறுகிறது. வீரத்திற்கும் இந்த மலருக்கும் என்ன சம்பந்தம் என்று புரியவில்லை. ஆனால், இதன் பெயர்களில் வீரம் தவறாமல் இடம்பெறுகிறது. அரளி என்று இன்று பொதுவாக அழைக்கப்படும் அலரிப்பூவுக்கு சமஸ்கிருத மொழியில் கரவீரா, ரக்தகரவீரா, அஸ்வக்னா, அஸ்வமரகா, அஸ்வஹய மரக்கா என்றெல்லாம் பெயர் சூட்டி அழைக்கப்படுகிறது. இந்தியில் இம்மலரை கனீர், கர்பீர் என்றும், மலையாளத்தில் சுவன்ன அரளி கரவீரம் மற்றும் கனவீரம் என்றும்  பல்வேறாக அழைக்கப்படுகிறது. இது தான் இதன் பிறப்பிடம் என்று குறிப்பாகச் சொல்ல முடியாதபடி தெற்காசியப் பகுதிகளில் வியாபித்திருக்கும் அழகுமலர். மிகவும் நச்சுத்தன்மை கொண்ட இம்மலரை மிகவும் ஜாக்கிரதையாக மருந்தாகவும் பயன்படுத்தலாம். வேர் மிகவும் நச்சுத்தன்மை கொண்டது. ஆனாலும் அரைத்துப் பசையாக்கி மேல்பூச்சாகப் பயன்படுத்த, தொழுநோய் குணமாகுமாம். கரவீர்ய தைலம் (சக்ர தத்தா) என்ற பெயரில் கவனமாகத் தயாரிக்கப்பட்ட தைலம், தோல் நோய்களுக்கு கை கண்ட மருந்து. மார்பகப் புற்று நோய்க்கும் இம்மலரின் உபயோகம் தீர்வாக அமையுமாம். உத்திர நட்சத்திக்காரர்கள் அரளிச் செடிகளை நடுவதும் வளர்ப்பதும் சிறப்பு எனச் சொல்லப்பட்டாலும், மலர்களை நேசிக்கும் அனைவருமே எளிதாக வளர்க்கக்கூடிய மிகச்சிறந்த மலரான அரளியை ரசித்துக்கொண்டே, அடுத்த அற்புத மலரான சங்கு புஷ்பத்தை ஸ்ரீவிஷ்ணுவின் பாதங்களில் சமர்ப்பிப்போம்.

 
மேலும் துளிகள் »
temple
தமிழகத்தின் திரிவேணி என போற்றப்படும் பவானி கூடுதுறை சங்கமேஸ்வரர் கோவிலில் ஆடிப்பெருக்கு ... மேலும்
 
temple
ஆடிப்பெருக்கு பூஜையை எளிய முறையில் செய்யலாம். பூஜையறையில் விளக்கேற்றி நிறை குடத்தில் இருந்து ஒரு ... மேலும்
 
temple
புதுச்சேரி அருகிலுள்ள நல்லாத்துார் வரதராஜப் பெருமாள் கோயில் ஆண்டாள் மாலையை வீட்டில் வைத்து   ... மேலும்
 
temple
நவக்கிரங்கள் தங்களுக்கு ஏற்பட்ட சாபம், துன்பம் தீர சிவபெருமானை வழிபட்ட தலங்கள் அவை. திருவாரூர்,  ... மேலும்
 
temple
ஊழிக்காலத்தில் உலகம் அழிந்து விடும்.  மீண்டும் உலகைப் படைக்க அளவிடமுடியாத சக்தியுடன் ஆயிரம் தலைகள், ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Copyright © 2020 www.dinamalar.com. All rights reserved.