ஆழ்வார்குறிச்சி : சிவசைலம் சிவசைலநாதர் பரமகல்யாணி அம்பாள் கோயிலில் மின்சார எச்சரிக்கை அலார மணி பொருத்தப்பட்டுள்ளது. சிவசைலம் சிவசைலநாதர் பரமகல்யாணி அம்பாள் கோயில் மேற்கு பார்த்த ஆலயமாகும். மிகவும் பிரசித்திபெற்ற இக்கோயிலில் கடந்த வாரம் பட்டப்பகலில் மர்மநபர்கள் புகுந்து உண்டியலில் இருந்த பணத்தை கொள்ளையடித்து சென்றுவிட்டனர். இந்நிலையில் கோயில் நிர்வாகம் சார்பில் 3 உண்டியல்களுக்கும் மற்றும் கோயிலின் உள் நடைகளில் உள்ள கதவுகளுக்கும் சேர்த்து புதிய எச்சரிக்கை அலார மணி பொருத்தப்பட்டுள்ளது. கோயில் பூட்டியபின்பு உண்டியல் மற்றும் கதவு போன்றவற்றை திறக்க முயற்சித்தால் அலார மணி அடித்து எச்சரிக்கை செய்யும்.