ஆழ்வார்குறிச்சி வேங்கடேச பெருமாள் கோயிலில் கருட சேவை
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
30செப் 2013 11:09
ஆழ்வார்குறிச்சி : ஆழ்வார்குறிச்சி வேங்கடேச பெருமாள் கோயிலில் புரட்டாசி இரண்டாவது சனிக்கிழமையை முன்னிட்டு கருடசேவை நடந்தது.ஆழ்வார்குறிச்சி கீழகிராமத்தில் வேங்கடேசபெருமாள் கோயில் உள்ளது. இங்கு பெருமாள், லெட்சுமி, பூமாதேவியர், ஆஞ்சநேயர், நரசிம்மர், கருடன், ஹயக்ரீவர் உட்பட பரிவார மூர்த்திகள் எழுந்தருளியுள்ளனர். இங்கு புரட்டாசி இரண்டாவது சனிக்கிழமையன்று நடந்த கருடசேவை விழாவில் ரவணசமுத்திரம் ராமசுப்பிரமணியன் குடும்பத்தினர் முன்னிலையில் காலையில் கும்பஜெபம், வேதபாராயணம், சிறப்பு அபிஷேகம், விசேஷ பூஜைகள், மாலையில் சகஸ்ர நாம அர்ச்சனை, சாயரட்சை தீபாராதனை, இரவு பெருமாள் கருட வாகனத்தில் எழுந்தருளலும் தொடர்ந்து தீபாராதனை நடந்தது.