பதிவு செய்த நாள்
30
செப்
2013
11:09
மெஞ்ஞானபுரம்: எள்ளுவிளை கோயில்விளை ஸ்ரீமன் நாராயண சுவாமி, ஸ்ரீமுத்தாரம்மன் கோவில் கும்பாபிஷேகம் மற்றும் புரட்டாசி மாத கொடைவிழா நேற்று துவங்கி வரும் 2ம் தேதி வரை நடக்கிறது. மெஞ்ஞானபுரம் அருகேயுள்ள எள்ளுவிளை கோயில்விளையில் உள்ள ஸ்ரீமன் நாராயணசுவாமி கோவில், ஸ்ரீமுப்பிடாதி அம்மன் கோவில், ஸ்ரீமுத்தாரம்மன் திருக்கோவில், ஸ்ரீஉச்சினிமாகாளி அம்மன் கோவில், சம்ரோஷண கும்பாபிஷேக விழா மற்றும் புரட்டாசி மாத வருடாந்திர கொடைவிழா நேற்று மாலை ஆறு மணிக்கு சம்ரோஷண கும்பாபிஷேகம், முகூர்த்தகால் நடு விழா, மற்றும் ஸ்ரீமன் நாராயணசுவாமிக்கு திருப்பூஜையுடன் துவங்கி, மறுநாள் அதிகாலை ஸ்ரீமன் நாராயண சுவாமிக்கு குருபூஜையும். மாலை சம்ரோஷண கும்பாபிஷேமும் இரவு பக்தர்களுக்கு பஞ்சாமிர்தம் வழங்கப்படுகிறது. நாளை மதியம் அம்பாளுக்கு பால்,பன்னீர், இளநீர், சந்தணம், குங்குமத்துடன் அபிஷேகமும், அம்பாளுக்கு உச்சி கால பூஜை, மஞ்சள் நீராட்டு, அம்பாள் பச்சை சாத்தி காட்சியருளல் மற்றும் அம்பாள் வீதி உலா வருதல். மாலை அம்பாள் திரு பூஜையும் படைக்கஞ்சி வைத்தலும், கலை நிகழ்ச்சிகளும், நள்ளிரவு பெண்கள் முளைப்பாரி எடுத்து சுவாமிக்கு காணிக்கை செலுத்துதலும், சுவாமிக்கு விசேஷ புஷ்ப அலங்கார பூஜையும் தீப ஆராதனையும், 2ம் தேதி காலை உணவு பிரித்தலும் பின்னர் நள்ளிரவு வரை இரவு கலை நிகழ்ச்சிகளும் நடக்கிறது. விழா ஏற்பாடுகளை விழாக் கமிட்டியினர் செய்துள்ளனர்.