பதிவு செய்த நாள்
09
அக்
2013
06:10
மற்றவர் கருத்துக்கு மதிப்பளிக்கும் தனுசுராசி அன்பர்களே!
ராசி நாதனான குரு தற்போது 7-ம் இடமான மிதுனத்தில் இருந்து நன்மைகளை தந்து கொண்டிருக்கிறார். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலைத்திருக்கும். சுபவிஷயம் குறித்த பேச்சில் முன்னேற்றம் உண்டாகும். ஆனால் அவர் அக்.22ல் வக்கிரம் அடைகிறார். அதன் பின் அவரால் முழுமையாக நன்மை தர இயலாது. ஆனாலும் நற்பலன்கள் தொடரத்தான் செய்யும்.முக்கிய கிரகங்களான சனி, ராகு சாதகமான இடத்தில் நின்று நன்மையை வாரி வழங்கிக் கொண்டிருக்கின்றனர். சூரியன்அவர்களோடு இணைகிறார். அவரால் மதிப்பு, மரியாதை அதிகரிக்கும். அரசு வகையில் நன்மை அதிகரிக்கும். சிலருக்கு அரசாங்க விருது, பட்டம் கிடைக்க யோகமுண்டு. கிட்டும். உடல் உபாதை நீங்கி பூரண குணம் காண்பீர்கள். கல்விக் காரகன் புதன் தற்போது துலாம் ராசியில் இருக்கிறார். அவரால் குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். பொருளாதார வளம் மேம்படும். தொழிலில் லாபம் அதிகரிக்கும். எடுத்த காரியம் வெற்றி அடையும். ஆனால் அவர் அக்.24 முதல் நவ.14 வரை வக்கிரம் அடைகிறார். அப்போது அவர் 10-ம் இடத்திற்கு செல்வதால் பெண்களின் ஆதரவு கிடைக்கும். பொன், பொருள் சேரும். நினைத்த பொருளை வாங்குவீர்கள். வங்கி கையிருப்பு அதிகரிக்கும். வெளியிடங் களிலிருந்து எதிர்பார்த்த உதவி கிடைக்கும். பூமிக்காரன் செவ்வாய் சிம்மராசியில் இருக்கிறார். இது சிறப்பான இடம் என்று சொல்ல முடியாது. முயற்சிகளில் தோல்வி ஏற்படும். உடல் ஆரோக்கியத்திலும் அக்கறை தேவைப்படும். சுக்கிரன் அக்.31 வரை உங்கள் ராசிக்கு 12-ம் இடத்தில் இருகிறார். அது சிறப்பான இடம் அல்ல. காரியத்தடை ஏற்படலாம். அதன்பின் அவர் இடம் மாறி உங்கள் ராசிக்கு வருவதால் பெண்களால் சுகம் கிடைக்கும். விரும்பிய ஆடை, ஆபரணங்களை வாங்கி மகிழ்வீர்கள். விருந்து விழா என சென்று வருவீர்கள். மொத்தத்தில் இந்த மாதத்தில் நவக்கிரகங்கள் சிறப்பான பலன்களை வாரி வழங்குவர் என்பதில் சந்தேகம் இல்லை.
நல்ல நாட்கள்: அக்.21,22, 23,24,25,30,நவ.1,2,3,4,7,8,11,12
கவன நாட்கள்: அக்.26,27,28
அதிர்ஷ்ட எண்கள்: 3,7 நிறம்: செந்தூரம், பச்சை
வழிபாடு: முருகன், காளி வழிபாடு உங்களை உயர்ந்த நிலைக்கு கொண்டு செல்லும். தினமும் வீட்டில் விளக்கு எற்றி வழிபடுங்கள். வெள்ளிக்கிழமை சுக்கினுக்கு அர்ச்சனை செய்யுங்கள்.