பதிவு செய்த நாள்
09
அக்
2013
06:10
என்ன வந்தாலும் கலங்காத மகர ராசி அன்பர்களே!
சனி தற்போது துலாம் ராசியில் உச்சம்பெற்று இருந்தாலும் சாதமாக காணப்படவில்லை. அவரோடு இணைந்திருக்கும் ராகுவும் நன்மை தரமாட்டார். ஆனால், இவை மீது குருவின் பார்வை படுவதால் அவர்கள் கெடுபலனைத் தரமாட்டார்கள். மேலும், இந்த மாதம் சூரியன்அவர்களோடு இணைகிறார். அவரால் நினைத்தது நிறைவேறும். மதிப்பு, மரியாதை அதிகரிக்கும். நினைத்த பொருளை வாங்குவீர்கள். வங்கி கையிருப்பு அதிகரிக்கும். வெளியிடங்களிலிருந்து எதிர்பார்த்த உதவி கிடைக்கும். பூமிகாரன் செவ்வாய் 8ம் இடத்தில் சாதகமாக இருந்தாலும், அவரால் உடல் நலம் சுமாராகவே இருக்கும்.கல்விகாரகன் புதன் துலாம் ராசியில் இருப்பதால் பெண்களின் ஆதரவு உண்டு. பொருள் சேரும். ஆனால், அவர் அக். 24 முதல் நவ. 14 வரை வக்ரம் அடைந்து 9-ம் இடத்திற்கு செல்கிறார். இதனால் மனதில் வேதனை வரலாம். சிலரது பொல்லாப்பை சந்திக்கலாம். விட்டுக்கொடுத்து போகவும். சேர்க்கை சகவாசத்தால் பணம் விரயமாகும். சுக்கிரன் 11ம் இடத்தில் இருந்து பணவரவு இருக்கச் செய்வார். சொந்தபந்தங்கள் வருகை இருக்கும். அக்.31ல் சுக்கிரன் இடம் மாறி, தனுசு ராசிக்கு வருகிறார். அங்கு காரியத்தடை, பொருள் நஷ்டம் ஏற்படலாம். முக்கிய கிரகங்களில் குரு சாதகமற்ற 6ம் இடத்தில் இருந்தாலும், அவரது 9-ம் இடத்துப் பார்வையால் பல்வேறு நன்மை கிடைக்கும். குடும்பத்தில் சுபநிகழ்ச்சிகள் நடக்கும். அவர், அக். 22ல் வக்கிரம் அடைவது உங்களுக்கு சாதகமானது. ஒரு கிரகம் வக்கிரம் அடையும் போது அவரால் சிறப்பபாக செயல்பட முடியாது. அந்த வகையில் சாதகமற்ற குருவால் சிறப்பாக செயல்படமுடியாது அல்லவா! எனவே குருவால் கெடுபலன்கள் நடக்காது. மாறாக அவருக்கே உரித்தான நன்மைகளை தரவும் தவறமாட்டார்.
நல்ல நாட்கள்: அக்.18,24,25,26,27,28,29,நவ.3,4,5,6,9,10, 13,14
கவன நாட்கள்: அக்.29,30
அதிர்ஷ்ட எண்கள்: 1,9. நிறம்: செந்தூரம், வெள்ளை
வழிபாடு: நவக்கிரகங்களில் சனி, ராகுவுக்கு அர்ச்சனை செய்யுங்கள். சனிக்கிழமை ஆஞ்சநேயரையும் விநாயகரையும் வணங்கி வாருங்கள். வெள்ளிக்கிழமை சிவன் கோவிலுக்கு சென்று வாருங்கள். பார்வையற்றவர்களுக்கு இயன்ற உதவி செய்யுங்கள்.