உடுமலை: உடுமலை பூளவாடி ராமலிங்க சவுடேஸ்வரி அம்மன் கோவிலில், நவராத்திரியையொட்டி, சிறப்பு வழிபாடுகள் வரும் 13 ம் தேதி துவங்குகிறது. கோவிலில், கடந்த 5 ம் தேதி கொலு வைப்பு வைபவம் நடந்தது. வரும் 13 ம் தேதி காலை 9:00 மணிக்கு மா விளக்கு ஊர்வலம் நடக்கிறது. பகல் 1.00 மணிக்கு கோவில் அமாவாசை பிரசாதக்குழு சார்பில் அன்னதானமும், மாலை 4:00 மணிக்கு அலகு சேவைக்குழுவினரின் சக்தி அழைப்பு நிகழ்ச்சியும் நடக்க உள்ளது. ராமலிங்க சவுடேஸ்வரி தேவாங்க குல அறக்கட்டளை சார்பில் கல்விப்பரிசு வழங்கப் படுகிறது. 14 ம் தேதி காலை 7:00 மணிக்கு சந்தைப்பேட்டையில் அம்பு சேவையும், பகல் 12.00 மணிக்கு அம்மன் திருவீதியுலா நிகழ்ச்சியும் நடக்கிறது. 15 ம் தேதி இரவு 7:00 மணிக்கு பொங்கல் பூஜை நடக்கிறது. நவராத்திரியையொட்டி கோவிலில், மகளிர் கும்மிப்பாட்டு நிகழ்ச்சி நாள்தோறும் இரவு 8:00 மணிக்கு நடக்கிறது. ஏற்பாடுகளை விழாக்கமிட்டியினர் செய்துள்ளனர்.