பதிவு செய்த நாள்
10
அக்
2013
10:10
அருப்புக்கோட்டை: அருப்புக்கோட்டை புளியம்பட்டியில், 5 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில், விவசாயிகள் விவசாயம் செய்கின்றனர். கடந்த இரு ஆண்டுகளாக மழை பொய்த்து விட்டதால், பயிர்கள் அனைத்தும் கருகி விட்டன. மேலும், இந்த ஆண்டு மற்ற பகுதிகளில், மழை ஓரளவு பெய்திருந்தும், அருப்புக்கோட்டை பகுதியில் மழை இல்லை. பயிர்களை காப்பாற்றவும், குடிநீருக்காவும், இப்பகுதி மக்கள் வர்ண ஜபம் செய்ய முடிவு öய்தனர். அதன்படி, நேற்று காலை 5 மணி முதல் மாலை 5 மணி வரை,புளியம்பட்டி கம்மவார் தெப்பத்தில், 20 க்கு மேற்பட்டவர்கள் நின்று கொண்டே, இடை விடாமல் திருப்பாவையின் 4 வது பாசுரத்தை ஜெபித்தனர். பின்னர், பொங்கல் இட்டு, சுவாமியை வழிபாடு செய்து, தங்கள் வர்ண ஜெபத்தை முடித்தனர்.