பொள்ளாச்சி: பொள்ளாச்சிக்கு வந்த சுவாமி விவேகானந்தர் ரத யாத்திரைக்கு பா.ஜ.,சார்பில் வரவேற்பு அளிக்கப்பட்டது. பொள்ளாச்சி பகுதியில், வலம் வரும் விவேகானந்தர் ரத யாத்திரைக்கு பஸ் ஸ்டாண்டில் பா.ஜ.,சார்பில் வரவேற்பு அளிக்கப்பட்டது. மாவட்டதலைவர் முத்துராமலிங்கம் தலைமை வகித்தார். நகர அமைப்பாளர் பாலு, மாவட்ட செயலாளர் தீபக், கோவை தெற்கு மாவட்ட இளைஞரணி பொறுப்பாளர்தண்டபாணி உட்பட பலர் வரவேற்பு நிகழ்ச்சியில் பங்கேற்றனர். இதில், விவேகானந்தர் உருவப்படம் அச்சிடப்பட்ட ஸ்டிக்கர் வினியோகிக்கப்பட்டது. விவேகானந்தர் போதனைகள் குறித்து விளக்கப்பட்டன.