புதுச்சேரி: முத்தியால்பேட்டை வேணுகோபால் சுவாமி கோவில் நவராத்திரி விழாவில், ராதாகிருஷ்ணன் அலங்காரத்தில், சுவாமி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். முத்தியால்பேட்டை வேணுகோபால் சுவாமி கோவிலில் நவராத்திரி விழா கடந்த வாரம் துவங்கியது. விழாவையொட்டி ஒவ்வொரு நாளும் பல்வேறு அலங்காரத்தில் சுவாமி பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார். எட்டாம் நாளான நேற்று முன்தினம், ராதாகிருஷ்ணன் அலங்காரத்தில், சுவாமி பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.