ராமநாதபுரம் நவராத்திரி நிறைவு விழா அம்பு விடும் நிகழ்ச்சி
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
15அக் 2013 10:10
ராமநாதபுரம் ராஜராஜேஸ்வரி அம்மன் கோயில் நவாரத்திரி திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியாக, நேற்று மகர்நோன்பு திடலில் அம்பு விடும் நிகழ்ச்சி பக்தர்களின் ÷ காஷத்திற்கு இடையே நடந்தது. கோயிலில் அக்., 4 முதல் 14ம் தேதி வரை நவாரத்திரி விழா நடந்தது. தினமும் சுவாமிக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள், கலைநிகழ்ச்சிகள் நடந்தது. விழாவின் சிறப்பு நிகழ்ச்சியாக, நேற்று விஜயதசமியை முன்னிட்டு மாலை அம்மனுக்கு சிறப்பு பூஜை நடந்தது. இரவு 7 மணிக்கு மேல் அம்மன் மகிஷாசுரமர்த்தினி அலங்காரத்தில் தங்க சிம்ம வாகனத்தில் எழுந்தருளினார். முன்னதாக வான வேடிக்கையுடன் கோட்டை வாசல் விநாயகர், வனசங்கரி அம்மன், சுவாமிநாத சுவாமி, ரெத்தினேஸ்வரர், உத்திரகாளி உள்ளிட்ட 19 சுவாமிகள் அடுத்தடுத்து அரண்மனை வாசலிலிருந்து ஊர்வலமாக மகர்நோன்பு திடலுக்கு சென்றடைந்தது. அங்கு, ராஜராஜேஸ்வரி அம்மன் பக்தர்களின் கோஷங்களுக்கு இடையே அம்புவிடும் நிகழ்ச்சி நடந்தது.