பதிவு செய்த நாள்
15
அக்
2013
10:10
கும்பகோணம்: ஜயவீர ஆஞ்சநேயர் கோவில் மகாகும்பாபிஷேகம் நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று வழிபட்டனர். கோவில் நகரமான கும்பகோணத்தில் உள்ள வைணவதலங்களில் முக்கிய தலமாக கரபாணி சுவாமி கோவில் திகழ்கிறது. மாசி மாதத்தில் மக நட்சத்திரத்தன்று இக்கோவிலின் தேரோட்டம் வெகு விமர்சையாக நடந்து வருகிறது. கோவிலின் தெற்கு கோபுர வாசலில், ஜயவீர ஆஞ்சநேயர் கோவில் உள்ளது. புகழ்பெற்ற இக்கோவிலில் மகாகும்பாபிஷேகம் கடந்த, 2000ம் ஆண்டில் நடந்தது. மீண்டும் அக்கோவில் திருப்பணி செய்து, அதன் மகாகும்பாபிஷேகம் நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று, ஆஞ்சநேயா, ஆஞ்சநேயா என்ற கோஷங்களை எழுப்பி வழிபட்டனர். கும்பாபிஷேகத்தை முன்னிட்டு யாகசாலை பூஜைகள் கடந்த, 8ம் தேதி துவங்கியது. கடந்த வியாழக்கிழமை இரவு, நான்காம் கால யாகசாலை பூஜை நடந்தது. அதில் வேலுக்குடி கிருஷ்ணன், சிட்டி யூனியன் வங்கி தலைமை செயல் இயக்குனர் மற்றும் மேலாண் இயக்குனர் காமகோடி, ராயா கோவிந்தராஜன், ஆடிட்டர் சூரியநாராயணன், சிட்டி யூனியன் வங்கி தலைமை பொதுமேலாளர் மோகன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். ஐந்தாம் கால யாகசாலை பூஜை நிறைவுற்று, அதிகாலை, 5.30 மணிக்கு புனித கலசர் புறப்பாடாகி, கரபாணி சன்னதி, கரபாணி தெற்குவீதி வழியாக வலம் வந்து, மூலவரின் விமான கோபுரத்துக்கும், மூலவர் மற்றும் உற்சவ மூர்த்திகளுக்கு புனித நீர் அபிஷேகம் நடந்தது. விழாவுக்கு ஏற்பாடுகளை ஜயவீர ஆஞ்சநேயர் கோவில் தர்ம கர்த்தா குடும்பத்தினர் டாக்டர் கலைச்செல்வன், இந்தியன் வங்கி ரமணி, முத்துதாண்டவன் மற்றும் தமிழ்நாடு வர்த்தகர் நலக்கழக ர்வாகிகள் கணேஷ், சேதுமாதவன் மற்றும் ர்வாகிகள் செய்திருந்தனர்.