விஜயதசமி அம்பு போடுதல் நிகழ்ச்சி: ஆயிரக்கணக்கான பக்தர் பங்கேற்பு!
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
15அக் 2013 03:10
தேவகோட்டை: நவராத்திரியின் நிறைவு நிகழ்ச்சியாக சுவாமிகள் வேட்டைக்கு சென்று வெற்றியுடன் திரும்பும் ஐதீகம். இந்த நிகழ்ச்சிக்காக தேவகோட்டை நகரில் உள்ள மீனாட்சி சுந்தரேஸ்வர் கோயிலிருந்து முருகன், கைலாசநாதர் கோயிலிருந்து முருகன், மும்முடிநாதர் கோயிலிலிருந்து முருகன், ரங்கநாதர் பெருமாள் கோயில் பெருமாள், கோதண்டராமர் கோயிலிருந்து ராமர், கிருஷ்ணர் கோயிலிலிருந்து கிருஷ்ணர்ஆகிய சுவாமிகள் அலங்கரிக்கப்பட்ட குதிரை வாகனங்களில் சிவன்கோயில் அருகில் மகர்நோன்பு பொட்டலுக்கு எழுந்தருளி அம்பு போட்டனர். பல்லாயிரக்கணக்கில் கூடியிருந்த இந்த மக்கள் போட்டிபோட்டு அம்புகளை எடுத்தனர். பொதுமக்கள் தங்கள் வீடுகளிலிருந்து கொண்டுவந்த கிளிக்கிகளை வாழைமரத்தில் குத்தி எடுத்துச் சென்றனர்.