உளுந்தூர்பேட்டை: எலவனாசூர்கோட்டை ஸ்ரீராஜநாராயண பெருமாள் கோவிலில் நாராயண சுவாமிக்கு புஷ்ப அலங்காரம் நடந்தது.உளுந்தூர்பேட்டை அடுத்த எலவனாசூர்கோட்டை ஸ்ரீராஜநாராயண பெருமாள் கோவிலில் திருவோணம் நட்சத்திரம் ஸ்ரீராஜநாராயண பெருமாள் சுவாமிக்கு உகந்த நாள் என்பதால், சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடந்தது.அதனையொட்டி நேற்று முன்தினம் மதியம் 6.30 மணிக்கு ஸ்ரீராஜநாராயண சுவாமிக்கு எண்ணைய் காப்பு, மஞ்சள் தூள், பால், தயிர், பச்சையரிசி மாவு, இளநீர், சந்தனம், சொர்ணாபிஷேகம் உள்ளிட்ட பொருட்களால் சிறப்பு அபிஷேகம் நடந்தது. பின்னர் ஸ்ரீராஜநாராயண சுவாமிக்கு சிறப்பு புஷ்ப அலங்காரம் செய்யப்பட்டு, பக்தர்களுக்கு அருள் பாலித்தார். நாலாயிரத் திவ்ய பிரபந்தம் பாடப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை கோவில் அறங்காவலர் குழு தலைவர் ராமதாஸ் மற்றும் அறங்காவலர்கள் செய்திருந்தனர்.