கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி சிவகாமசுந்தரி சமேத சிதம்பரேஸ்வரர் கோவிலில் நவராத்திரி வழிபாடு நடந்தது.கள்ளக்குறிச்சி சிவன் கோவிலில் நவராத்திரி இறுதிநாள் வழிபாட்டில் பராசக்தி அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்து, கோவில் உள்பிரகாரம் வலம் வந்து, மகா தீபாராதனை நடந்தது.இரவு மகிஷாசுர வதம் செய்ததை நினைவூட்டும் விதத்தில் அலங்கரிக்கப்பட்ட பராசக்தி அம்மன் முன்னிலையில் வாழை மரத்தில் அம்பு எய்யும் நிகழ்ச்சி நிகழ்த்தப்பட்டது. தொடர்ந்து 10ம் நாள் நவராத்திரி விழாவில் பராசக்தி அம்மன் சிறப்பு அலங்காரத்தில் அருள் பாலித்தார்.