பதிவு செய்த நாள்
17
அக்
2013
12:10
திண்டுக்கல்: பக்ரீத் பெருநாளையொட்டி, திண்டுக்கல் பேகம்பூர் பெரிய பள்ளிவாசலில் ஆயிரக்கணக்கான முஸ்லிம்கள் கூடி விசேஷ தொழுகை நடத்தினர். முதலியார்பேட்டை, என்.ஜி.ஓ காலனி, பெரியகடை வீதி மசூதி, கோவிந்தாபுரம் மசூதி, செல்லையாண்டியம்மன் கோயில் தெரு மசூதி, பாரப்பட்டி மசூதி உள்ளிட்ட 30 க்கும் மேற்பட்ட மசூதிகளில் சிறப்புத் தொழுகை நடைபெற்றது. பழநி, கொடைக்கானல், ஒட்டன்சத்திரம், வத்தலகுண்டு மற்றும் கிராமங்களில் சிறப்புத் தொழுகை நடைபெற்றது. முஸ்லிம்கள் புத்தாடைகளை அணிந்து சிறப்புத் தொழுகையில் ஈடுபட்டனர். அத்துடன் ஆடு, மாடு, ஓட்டகத்தை பலியிட்டு, நண்பர்கள், உறவினர்கள், ஏழைகளுக்கு பகிர்ந்தளித்தனர்.