திருக்கழுக்குன்றம்: லட்சுமிவிநாயகர் கோவிலில், மண்டலாபிஷேகம் நிறைவு விழா நேற்று நடந்தது. திருக்கழுக்குன்றம், வேதகிரீஸ்வரர் கோவிலின் உப கோவிலாக, லட்சுமிவிநாயகர் கோவில் உள்ளது. இக்கோவில், கடந்த செப்டம்பர், 1ம் தேதி, கும்பாபிஷேகம் நடந்தது. அதைத் தொடர்ந்து, 48 நாட்கள் மண்டல அபிஷேகம் நடத்தப்பட்டது. அதன், நிறைவு விழாவில், சுவாமிக்கு, சிறப்பு அபிஷேகம், கலச பூஜை, வேள்விகளும் நடத்தப்பட்டன. விழா ஏற்பாடுகளை கோவில் செயல் அலுவலர் வீருபொம்மு, தக்கார் பாலகிருஷ்ணன் மற்றும் இந்து முன்னணியினர் செய்திருந்தனர்.