தொடுகாடு: பராசங்குபுரம் ராதா ருக்மணி உடனுறை வேணுகோபாலசுவாமி கோவிலில், மகா கும்பாபிஷேகம் நடந்தது. கடம்பத்துார் ஒன்றியம், தொடுகாடு ஊராட்சிக்கு உட்பட்டது, பராசங்குபுரம் கிராமம். இந்த கிராமத்தில் உள்ள, ஐ.டி.ஐ., காலனியில், ராதா ருக்மணி உடனுறை வேணுகோபால சுவாமி கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில், மகா கும்பாபிஷேகம், நடந்தது. 48 நாட்களுக்கு, மண்டல பூஜை விழா நடைபெறும்.