மதுரை: மதுரையில் தேவார தமிழிசை மாநாடு ஜன., 4, 5 மற்றும் 6ம் தேதிகளில் நடக்கிறது. இதற்காக, மதுரை உட்பட 8 மாவட்ட பள்ளி மாணவர்களுக்கான தேவார ஒப்புவித்தல் போட்டிகள் நடத்தப்பட்டு வருகின்றன. கல்லூரி மாணவர்களுக்கு இசைப்பயிலரங்கம் நடக்கவுள்ளன. மதுரையில், 63 நாயன்மார்கள் பற்றிய பேச்சரங்கத்தில் பங்கேற்க, 63 மாணவர்கள் தேர்வு செய்யப்படவுள்ளனர். இசை பயிலரங்கம் மற்றும் பண்கள் தொடர்பான கருத்தரங்கமும் நடக்கிறது. இதில், முன்னணி தேவார இசை வல்லுநர்கள், அறிஞர்கள் பங்கேற்கின்றனர். மேலும், விவரங்களுக்கு 94439 30540ல் தொடர்பு கொள்ளலாம், என மதுரை திருநாவுக்கரசர் இசை ஆராய்ச்சி மற்றும் இசைக் கல்வி அறக்கட்டளை நிர்வாகிகள் சுரேஷ்சிவன், இளங்கோவன் தெரிவித்தனர்.