சிதம்பரம்: தில்லைக்காளியம்மனுக்கு ஐப்பசி மாத அமாவாசையை முன்னிட்டு மகாபிஷேகமும், 149-வது சிறப்பு அர்த்தசாம பூஜையும் சனிக்கிழமை இரவு நடைபெற்றது. குடம், குடமாக நல்லெண்ணை அபிஷேகம் மற்றும் தைலகாப்பு, குங்குமகாப்பு செய்யப்பட்டு, வாசனை திரவியங்கள் மற்றும் வெண்பட்டு சாற்றப்பட்டு மற்றும் வெட்டிவேர், விலாமுச்சு வேர்களால் ஆன சிறப்பு அலங்காரத்தில் ஸ்ரீதில்லைக்காளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். பின்னர் சிறப்பு அர்த்தசாமபூஜை நடைபெற்றது.