பதிவு செய்த நாள்
04
நவ
2013
12:11
திருச்சி: வயலூர் முருகன் கோவிலில் கந்த சஷ்டி திருவிழா நேற்று கணபதி ஹோமத்துடன் தொடங்கியது. காலை 6 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டு கணபதி ஹோமம், அபிஷேகம், சுப்பிரமணியசுவாமிக்கு லட்சார்ச்சனை போன்றவைகள் நடைபெற்றன. அதனைத் தொடர்ந்து முருகனுக்கு 6 வகையான புஷ்பம், பழங்கள், நெய்வேத்தியம், தீபாராதனை போன்றவைகள் அடங்கிய சண்முகா அர்ச்சனையும், ரக்ஷõபந்தனமும் (காப்பு கட்டுதல்), பால், தயிர், சந்தனம், இளநீர், பன்னீர், பஞ்சாமிர்தம் உள்பட 16 வகையான அபிஷேகமும், ஆராதனையும் நடந்தன.